சானிட்டரி நாப்கின் - புற்றுநோயை ஏற்படுத்துமா?

ஹெல்த்தமிழ்செல்வி நவீன், மகப்பேறு நல மருத்துவர்

‘‘பருவமடைந்த ஒரு பெண்ணிடம் மாதவிடாய் என்றால் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் மட்டுமே பதிலாக தருகிறாள்..''

இது ‘மாதவிடாய்' என்கிற ஆவணப்படத்தில் வரும் ஒரு காட்சி.. தன் உடலின் இயற்கை மாற்றத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் தயங்குவதுதான்  பெண்ணின் உடல் ரீதியிலான பல பிரச்னைகளுக்குக் காரணம்.

இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை: 65 சதவிகிதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள்.

இவை ஒரு பக்கம் இருக்கட்டும்... நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick