சகலகலா சருமம் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வசுந்தரா, அழகுக்கலை நிபுணர்

னித உடலில் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று தோல்.இதன் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிக் கடந்த இதழ்களில் பார்த்திருக்கிறோம். சரும அழகுக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லிக்கொண்டு தினம் தினம் விளம்பரப்படுத்தப்படும் அழகு சாதனங்களைக் கண்களை மூடிக்கொண்டு வாங்கிப் பயன்படுத்துகிறோம். அவை நமக்குப் பொருந்துமா, அவசியம்தானா, தவறாகப் பயன்படுத்தினால் பிரச்னைகள் வருமா என்று எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

அழகு சாதனங்கள் பயன்படுத்தும்போது அந்தந்தச் சரும வகைக்கு ஏற்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைசர், நைட் க்ரீம், டே க்ரீம், ஜெல், சன்ஸ் க்ரீம், ஷாம்பூ, கண்டிஷனர் என எல்லாமே அவரவர் சருமம் மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தனித்தனியே கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் பி.எச் அளவு இருக்கும். நம் சருமத்தின் பி.எச் அளவு தெரிந்து அதற்கேற்ப பொருந்திப்போகிற அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குச் சருமத்தின் தன்மை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
தண்ணீர், புறச்சூழல் காரணிகள் போன்றவற்றாலும் சருமத்தின் தன்மை மாறலாம். சருமத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள ஸ்கின் டெஸ்ட்டிங் அவசியம். பார்லர்களில் சிகிச்சை பெறச் செல்பவர்கள் முதலில் அவர்களது சருமத்தின் தன்மையையும் அதிலுள்ள பிரச்னைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதுதான் சரியான முறையாகும்.

சருமத்தை எப்படி டெஸ்ட் செய்வது?

டிஷ்யூ பேப்பர் முறை: முகத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். டி ஸோன்  (T Zone) எனப்படும் நெற்றி, மூக்கு அடங்கிய பகுதி ஒன்று. இன்னொன்று யு ஸோன் (U Zone) எனப்படும் கன்னங்கள். இந்த இரண்டு பகுதிகளிலும் வேறு வேறு டிஷ்யூ பேப்பரை அழுத்திப் பார்க்க வேண்டும். அப்படி அழுத்தும்போது அதில் லேசான எண்ணெய்ப் படலம் தெரிந்தால் அது எண்ணெய்ப் பசையான சருமம். எதுவுமே இல்லை என்றால் அது சாதாரண மற்றும் வறண்ட சருமமாக இருக்கலாம் எனத் தெரிந்துகொள்ளலாம். இதைக் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும்.

மாய்ஸ்ச்சர் செக்கர்: இது பார்லர்களில் செய்யப்படக்கூடியது. இதை நம் சருமத்தின் மேல் வைத்துச் சோதிக்கும்போது 40-க்கும் மேல் காட்டினால் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் அசிடிக் அளவு சரியாக இருப்பதாகவும் அர்த்தம். 40-க்குக் கீழ் இருந்தால் சருமத்துக்கு ஈரப்பதம் போதவில்லை என்றும் உணவிலும் ஈரப்பதத்திலும் கவனம் தேவை என்று அர்த்தம்.

ஜிகே 4: ஜிகே 4 என்ற கருவியின் மூலம் பார்க்கும்போது நம் சருமம் வறண்டிருக்கிறதா, ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாம். இக்கருவியிலுள்ள மினி சிப் சருமத்தின் ஈரப்பதத்தைச் சரிபார்த்துச் சொல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick