காபி - ஏன்? எவ்வளவு? - கமகம தகவல்கள்!

காலை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும்; அலுவலகமாக இருக்கட்டும்... நம்மைச் சந்திக்கும் விருந்தினர்களையோ, நண்பர்களையோ உபசரிக்க முதலில் நாம் கேட்கும் கேள்வி, “காபி சாப்பிடுறீங்களா?” என்பதுதான். இப்படி, நம்முடைய வாழ்விலும், கலாசாரத்திலும், பழக்கவழக்கத்திலும் இரண்டறக் கலந்துவிட்டது காபி.

காபிக்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் காபியைக் கண்டறிந்தவர்கள், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். காடுகளில் காய்த்துச் செழித்திருந்த காபி செடிகளை மேய்ந்த ஆடுகள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்ததைக் கண்ட தொழிலாளிகள் தாங்களும் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் வழியாகத்தான் காபி வெளியுலகுக்கு வந்தது. இன்று உலக அளவில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிக பரிவர்த்தனை நடப்பது காபியில்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick