ஏன்? எதற்கு? எதில்? - நியாசின் | Health benefits of Niacin - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/07/2017)

ஏன்? எதற்கு? எதில்? - நியாசின்

அம்பிகா சேகர், டயட்டீஷியன்

நியாசின் (Niacin)... `வைட்டமின் பி 3 காம்ப்ளெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதை `நிகோட்டினிக் அமிலம்’ (Nicotinic Acid) என்றும் சொல்வார்கள். இந்த வைட்டமின் இதயத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்த வைட்டமின் குறைபாட்டால் `பெல்லாக்ரா’ (Pellagra) எனும் தோல் நோய் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் மத்தியில் சுகாதாரமற்ற சூழ்நிலை, உயிர்ச்சத்துப் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக இந்தத் தோல் நோய் ஏற்படுகிறது. நல்ல சுகாதாரச் சூழலில் வாழ்வது, ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை உண்பதன் மூலம் இந்த நோயை எளிதாகக் குணப்படுத்தலாம்.

உணவைச் சமைக்கும்போது நிகோட்டினிக் அமிலம் அழிவதில்லை. ஆனால், நீரில் கரையும் தன்மை உள்ளதால் அதிகளவு நீரில் சமைத்து அந்த நீரை வெளியேற்றும்போது இது வீணாகிறது. நமது வயிற்றால் உறிஞ்சப்பட்டு, சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. திசுக்களின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க