டாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம் | Appendicitis: Causes, Symptoms, and Treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

டாக்டர் கேசவ் ஜெகதீசன், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்

யிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும்... இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு வாய்வு மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என இருக்கின்றோம். ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாய்வு மட்டுமே பிரச்னை... அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது, சிறுநீரகக் கல், ஹெர்னியா, பித்தப்பைக் கல், அப்பெண்டி சைட்டிஸ், குடல் அழற்சி நோய்கள் எனப் பல்வேறு நோய்த் தாக்குதலின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, அப்பெண்டிசைட்டி ஸுக்கான அறிகுறிகள் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிறுநீரகக் கல்லின் அறிகுறிகளும் அப்பெண்டி சைட்டிஸ் அறிகுறி களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்; இரண்டுக்குமான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை.  அப்பெண்டி சைட்டிஸ் என்பது என்ன? அது யாருக்கெல்லாம் வரும்? அதன் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கே விடை காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick