ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

மருந்துகளின் விக்கிபீடியா

மருத்துவர்கள் எழுதித்தரும் மாத்திரைகளின் பெயர்கள் கூட முன்பு நமக்குப் புரியாது. இப்போது, மக்களிடம் விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. என்ன மாத்திரை சாப்பிடுகிறோம், அதன் காம்பினேஷன் என்ன என்பது வரை கவனித்துப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு உதவும் ஆப் தான் Medical Drugs Guide Dictionary. மருந்தின் பெயரைச் சொன்னால், அதன் பலன்கள் எவை, என்னென்ன பிராண்டுகள் இந்த காம்பினேஷனில் வருகின்றன என அவற்றின் முழுமையான தகவல்களைக் கொண்ட மருந்துகளின் விக்கிபீடியாவாகவே இருக்கிறது. அழகான வடிவமைப்பும் எளிமையான விளக்கங்களும் பிடித்துப்போய், ஒரே ஆண்டில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் ஆப்-ஆக வளர்ந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick