தள்ளிப்போடாதே!

ப்ரியா செல்வராஜ், மகப்பேறு மருத்துவர்

நிர்மலா மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவருக்குத் திருமணமாகி, ஒரு வருடம் ஆகிறது. கோயில்கள், புண்ணியத் தலங்கள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்றுவருவார். இந்த விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஒரே சிக்கல் - மாதவிடாய். அவர் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தார். ஒரு கட்டத்தில், அந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. காரணம், அவருக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் மாதவிடாய் வரவே இல்லை. ஒருவேளை தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் மருத்துவரைச் சந்தித்தார் நிர்மலா.

``நீங்கள் தொடர்ந்து மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட விளைவு இது” என்று மருத்துவர் கூறிய பதில், நிர்மலாவுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தது. நம்மில் பலர் நிர்மலாவைப் போலவே, குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் வரும் நாள்களில் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைப் பின்விளைவுகள் அறியாமல் உட்கொள்கிறோம். சரியான மருந்துவ ஆலோசனைகள் இல்லாமல், உட்கொள்ளும் மாத்திரைகளால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கிக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ப்ரியா செல்வராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick