ஏன்? எதற்கு? எதில்? - கொலாஜென் (Collagen)

அம்பிகா சேகர் டயட்டீஷியன்உணவு

கொலாஜென் என்பது,  நமது உடலில் தசைகள், எலும்பு, தோல், ரத்தக்குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் உள்ள ஒருவகைப் புரதம்.  இது எலும்பு, தோல் போன்றவற்றை இறுக்கமாகவும் சக்தியுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் மூட்டுகளுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது. ஆனால், நமக்கு வயதாகும்போது இந்தப் புரதத்தின் உற்பத்தி குறையும். அதனால்தான் வயதானவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், தசை தளர்ந்து போதல், மூட்டுகளில் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உண்ணுதல், புகைப்பிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களாலும் நமது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick