என் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்

ஹெல்த் ஜெயராம், நுரையீரல் சிறப்பு மருத்துவர்

ம் உடலில் மூளையின் கட்டளையால் நடக்கும் சில முக்கியமான செயல்களில் சுவாசமும் ஒன்று. நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் மூச்சை அடக்க முடியாது. நாம் சரியாக சுவாசிக்கிறோமா? நாம் மூச்சுவிடும் விகிதம் சரியா? சரியாக மூச்சுவிடாவிட்டால் சுவாசப் பிரச்னை ஏற்படுமா? சுவாசப் பிரச்னையின் அறிகுறிகள் என்னென்ன?  என்பனபோன்ற பல சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார், நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராம்.

சுவாசத்தின் தொடக்கம்


தாய், பிரசவிக்கும்போது, சுவாசத்தை எதிர்கொள்ள முடியாமல் குழந்தை கதறி அழும். அந்தக் கதறலே அந்தக் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சு. 10 மாதங்களாகத் தாயின் கருவறையில் இருந்த குழந்தை முதன்முறையாக வெளிக்காற்றை சுவாசிப்பதால் ஏற்படுவதே அந்த அழுகை. அந்தத் தருணம் முதல் கடைசி மூச்சு உள்ளவரை நேரடியாக மூளையின் கட்டுப்பாட்டில் சுவாசம் செயல்படுகிறது.

ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும்போது ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் என்பதைக் கணக்கிடுவதே சுவாச விகிதம். தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் நாம் ஒரே அளவு எண்ணிக்கையிலேயே சுவாசிக்கிறோம். மேலும், உறங்கும்போது நாம் சுவாசிக்கும் வேகம் மாறுபடுமே தவிர, எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது.  பொதுவாக, ஒரு நிமிடத்துக்கு 12-ல் இருந்து 18 முறை சுவாசிக்கிறோம்.

சுவாச விகிதம் கணக்கிடுவது எப்படி?

ஒரு நிமிடத்தில் நாம் எத்தனைமுறை சுவாசிக்கிறோமோ அதுவே சராசரி சுவாச விகிதமாகும். இந்தக் கணக்கீடு பல காரணிகளால் மாறக்கூடும். உதாரணமாக, உடல் பருமனானவர்கள், இதயநோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களின் சுவாச விகிதத்தைக் கணக்கிடுவது சற்று சிரமம். சுவாச விகிதக் கணக்கெடுப்பில் முக்கியமான மற்றொன்று, கணக்கிடும் நேரம். நாம் விழித்திருக்கும்போதோ நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து முடித்தபின்னரோ வேலை களைச் செய்துமுடித்தவுடனோ கணக்கிடக் கூடாது. அவ்வாறு எடுக்கப்படும் அளவு துல்லியமாக இருக்காது. ஓய்வில் இருக்கும்போது எடுக்கப்படும் அளவே சரியானது.

சுவாச விகிதத்தைக் கணக்கிடுவதில் சவாலான ஒன்று, மூளையின் செயல்பாடு. ஒரு நிமிடத்தில் நாம் எத்தனைமுறை மூச்சு விடுகிறோம் என்பதை மூளையே முடிவுசெய்யும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறையும்போதோ, கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு அதிகமாகும்போதோ அடிக்கடி சுவாசிக்க வேண்டும் என நம் மூளை கட்டளையிடும். உதாரணமாக, ஒரு நோய்த் தொற்றின் காரணமாக நம் உடலில் கார்பன்-டை ஆக்ஸைடு அதிகரித்தால், (ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கும்போது) நமது மூளை, நம்மை வேகமாக சுவாசிக்க வைத்து கார்பன்-டை ஆக்ஸைடை வெளியேற்றும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick