கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

நான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு கப் வரை டீ, காபி குடிக்கிறேன். அதிகமாக டீ, காபி குடிப்பது நல்ல பழக்கம் இல்லை என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏதும் வருமா?

-சி. சரண்யா, வேளச்சேரி


தினமும் மூன்று முதல் நான்கு கப் வரை குடிக்கலாம். குறிப்பாக, காபியைத்  தவிர்த்து டீ பருகலாம். காபியில் உள்ள கஃபைனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. டீ, மூளையைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். இதயத்துக்கும் நுரையீரலுக்கும் இதமளிக்கும். உடலின் தசை, நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவும். ஆனால், எதையும் அதிக சூடாகக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடிப்பதால் வயிற்றின் உட்சுவர் புண்ணாக வாய்ப்புண்டு. மிதமான சூட்டில்தான் குடிக்க வேண்டும்.  நான்கு கப்புக்கு மேல் டீ, காபி குடிப்பதால் நரம்பு மண்டலமும் வயிறும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அளவாக எடுத்துக்கொள்வதே  சிறந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick