உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்?

ஹெல்த்வி.சொக்கலிங்கம், இதயநோய் சிறப்பு மருத்துவர்

யர் ரத்த அழுத்தம், உலகை ஆட்கொள்ளத் துடிக்கும் உயிர்க்கொல்லி நோயாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மாரடைப்பு, பக்கவாதம், பார்வை பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகளே இல்லாமல், உயிரைப் பறிக்கக்கூடிய கொடியநோய். அதனால்தான், இதை ‘மெல்லக் கொல்லும் நோய்’ (Silent Killer) என்கிறார்கள்.

உடல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு, ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த ரத்த அழுத்தம்தான் உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தமானது, வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்துச் சிறிது மாறுபடலாம். சீரான ரத்த அழுத்தத்தை, 120/80 மி.மீ. மெர்குரி என்று அளவிடுகிறார்கள். அதாவது, இதயம் ஒருமுறை சுருங்கி ரத்தத்தை மகா தமனியில் செலுத்தும்போது, ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்துக்கு ‘சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்’ (Systolic blood pressure) என்று பெயர். இந்த ரத்த அழுத்தம், சராசரியாக 120 மி.மீ மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும். ரத்த நாளங்கள் இயல்பாக இருக்கும் நிலையில் உள்ள அழுத்தத்துக்கு ‘டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்’ (Diastolic blood pressure) என்று பெயர். இந்த ரத்த அழுத்தம் சராசரியாக 80 மி.மீ மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick