ஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை!

“என்னப்பா லைட்டா தொப்பை எட்டிப் பார்க்குது” என்று நண்பர்களில் எவரோ ஒருவர் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போக, அவ்வளவுதான் அன்றிரவு தூக்கமே வராது. உடற்பயிற்சித் தொடர்பாக இருக்கும் மொபைல் ஆப்கள், அதுவும் ரன்னிங் தொடர்பான ஆப்கள் எல்லாம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து விடுவோம். “நாளையிலிருந்து இதெல்லாம் செய்ய வேண்டும்” எனக் காற்றிலேயே ஓர் உடற்பயிற்சி அட்டவணையை வரைந்துகொண்டு அதை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வோம். சிலர் ஒருபடி மேலே போய் பிரின்ட் அவுட் எடுத்து அறையில் ஒட்டிக்கொள்வார்கள். அதைப் பின்பற்றுகிறோமா என்பது வேறு கதை.

இப்படி உடலை வலுவாக, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல பயிற்சிகள் செய்கிறோம். அதே அக்கறை நம் மூளைக்கும் மனதிற்கும் கொடுக்கப்படுகிறதா? நம் மூளையின் செயல்பாட்டைச் செம்மைப்படுத்த, கூர்மைப்படுத்த அதேபோல் ஓர் அட்டவணை போடுவது அவசியமாகிறது. வாரத்தின் ஏழு நாள்களும் இதைப் பின்பற்றினால் மனதளவில் என்றும் இளமையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

திங்கள்: மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவு வகைகளுக்கு ரெட் கார்பெட்!

சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் தீங்கு விளைவிப்பவையே. இதனால் உடலில் கொழுப்பு  அதிகரித்து நம் மூளையின் செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கிறது. அல்சைமர் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் நோயை ஏற்படுத்தி நினைவு மற்றும் பிற முக்கியமான மனச் செயல்பாடுகளை அழிக்கிறது. இதேபோல் மற்றவர்களைக் காட்டிலும், வரம்புமீறிக் குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மனச்சோர்வு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் அதிகம். மது மற்றும் போதை பானங்கள் உணவுகளின் மூலம் மூளைக்குச் செல்லும் ஆற்றலைத் தடுக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick