உணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்

ஹெல்த்வினிதா கிருஷ்ணன், ஊட்டச்சத்து நிபுணர்

“டீன் ஏஜ் பருவம் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் உடலில் நிகழ்வது இக்காலகட்டத்தில்தான். இப்பருவத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைத் தர வேண்டும் என்பது குறித்துப் பெற்றோருக்குப் போதிய அளவில் விழிப்பு உணர்வு இல்லை. பெரும்பாலான டீன் ஏஜ் குழந்தைகளின் உணவு விருப்பம் மற்றும் உண்ணும் முறை இயல்புக்கு நேர் எதிராகவே உள்ளன. இதன் விளைவாக உடல் எடை, உளவியல், படிப்பு எல்லாமே பாதிப்புக்கு உள்ளாகின்றன. உணவைச் சரிசெய்யாமல் இவற்றுக்குத் தீர்வுகாண முடியாது’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணன்.

‘பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் அவர்கள் பருவமடைவதுகூடத் தள்ளிப்போகக்கூடும். இந்தக் காலகட்டத்தில் நுண்ணிய ஊட்டச்சத்துகளுக்கான தேவை ஆண், பெண் உடல்களில் அதிகரிக்கின்றன. சிறுமிகளுக்கு, பூப்படையும் காலத்தில் கொடுக்கப்படும் உணவுகள் அவர்கள் தாய்மைக் காலம் வரை உதவும். மாதவிடாய்த் தொடக்கத்தில் வெளிப்படும் ஹார்மோன்களே தொடை, இடுப்பு, மார்பகங்கள் ஆகிய பகுதிகளில் கொழுப்பு சேரக் காரணம். இதனால், உடல் எடையை அதிகரிக்கச்செய்யும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், சத்தான காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick