ஸ்வீட் எஸ்கேப் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

“டாக்டர் எனக்கு இரண்டு, மூணு நாளா ஜலதோஷம், காய்ச்சல் இருந்தது. அதனால, இன்சுலின், சர்க்கரைநோய் மாத்திரை எடுத்துக்கலை. இதனால பிரச்னை ஒன்னும் இல்லையே?’’ என்று கேட்டார், என்னிடம் தொடர் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர்.

சர்க்கரைநோயுடன் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே சவாலான நாளாக இருக்கிறது. சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க மாத்திரைகள், இன்சுலின் ஊசி, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வாழ்பவர்கள், ஏதேனும் உடல்நலக் குறைவு வந்தால் என்ன செய்வது என்று திக்குமுக்காடிவிடுவர். உடல்நலக் குறைவு உள்ள நாட்களில் சர்க்கரையைக் கட்டுக்குள்வைப்பது சற்று சிரமமான விஷயம்தான். சாதாரணக் காய்ச்சல், சளிப் பிரச்னை என்றால், எந்தக் கவலையும் இன்றி படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம். ஆனால், ஓய்வு எடுப்பது மட்டுமே நல்ல தீர்வு அல்ல. உடல்நலக் குறைவு அல்லது நோய்த்தொற்று ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள்வைப்பதில் சிக்கலை உருவாக்கிவிடுகிறது. எனவே, இவர்கள் விழிப்புடன் இருந்து நோயைக் குணப்படுத்துவதுடன், சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லை எனில், சர்க்கரை அளவு அதிகரித்து, டயாபடீக் கீட்டோஅசிடோசிஸ் (Diabetic Ketoacidosis) என்ற நிலையை உருவாக்கிவிடும். ஆனால், இதைத் தவிர்க்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick