மருந்தில்லா மருத்துவம் - 24 | Chakra healing meditation for better health - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2016)

மருந்தில்லா மருத்துவம் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ருந்தில்லா மருத்துவமுறையில், எப்படி நேரில் வந்து சிகிச்சை அளிப்பது என்பதை விவரித்திருந்தேன். ஆனால், இந்த சிகிச்சை முறையில், ஒருவர் நேரில் வராமலேயே சிகிச்சை பெற முடியும். இது சாத்தியமா? ரெய்கி சிகிச்சை முறையில் உலகம் எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச சக்தியை மட்டுமே நோயுற்றவரின் உடலுக்குள் ஊடுருவச்செய்வதால், இந்த சக்தி, நோயின் மூல காரணத்தை வெளியேற்றி, பூரண குணமடையச் செய்யும். இதே சக்தியை, ஆழ்நிலை தியானத்தின் மூலம் ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்த மூன்றாவது கண் சக்தியை அதிகரித்து, அதன் மூலம் உலகில் எந்த இடத்தில் இருப்பவருடனும், தொடர்பு கொள்ள முடியும்.

இதனால் என்ன செய்ய முடியும்? ரெய்கி சிகிச்சை முறையில் ஆழ்நிலைத் தியானத்தில் மூன்றாவது கண் மூலம், வேறு இடத்தில் உள்ளவரின் ஆக்ஞா சக்கரத்துடன் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம், தொலைதூர சிகிச்சை (Distant healing) அளிக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க