3 சீக்ரெட்ஸ் - டயட்... ஆக்டிவ்... ரிலாக்ஸ்... நலம் நம் கையில்! | Diet secrets - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2016)

3 சீக்ரெட்ஸ் - டயட்... ஆக்டிவ்... ரிலாக்ஸ்... நலம் நம் கையில்!

`உணவுதான் உற்சாகம்; உற்சாகம்தான் உணவு. நல்ல உணவுகள் உற்சாகத்தைத் தரும். உற்சாகமாக இருந்தால், உடலின் இயக்கம் சீராகும். மனம் அமைதி பெறும். இதைப் புரிந்துகொண்டாலே வாழ்வின் ஃபார்முலா நமக்கு எளிதாகிவிடும். உணவு, ஓய்வு, இயக்கம் இந்த மூன்றுக்குமே அடித்தளமாக இருப்பது சரியான வாழ்க்கைமுறை. இதைப் புரிந்துசெய்யக் கற்றுக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும். ஆரோக்கியம் கைகூடும்.

உணவு

காலை உணவு முக்கியம்!

குளிப்பது, பல் தேய்ப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு காலை உணவும் முக்கியம். அன்றைய நாளுக்கான எனர்ஜியைத் தருவது காலை உணவு மட்டும்தான். உழைக்கத் தேவையான சக்தி, காலையில் உண்ணும் இட்லி, பொங்கல், தோசையில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், அடுத்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்வோம். இதனால், உடலுக்குக் கெடுதிதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க