தேவை ஒரு குடும்ப மருத்துவர்! | Family Doctor - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2016)

தேவை ஒரு குடும்ப மருத்துவர்!

ழைய திரைப்படங்களில் ஒரு காட்சி யைப் பார்த்திருப்பீர்கள். உடல்நிலை சரியில்லாதவரை ஒரு மருத்துவர் வீடு தேடிவந்து பரிசோதித்து, ஊசி போட்டுவிட்டுப் போவார். முன்பெல்லாம் பொது மருத்துவர்கள் அதிகம் இருந்த காலம் அது. வீட்டுக்கு ஒரு மருத்துவர் இருப்பார். நாம் அவரை ‘ஃபேமிலி டாக்டர்’ என்போம். அவருக்கு அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் உடல்நிலை பற்றியும் முழுமையாகத் தெரிந்திருந்தது. அதனால், அவர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு எது அலர்ஜி, என்ன பிரச்னை என முன் உணர்ந்து சிகிச்சை தர முடிந்தது. இன்று நிலைமை அப்படி இல்லை. மருத்துவ விஞ்ஞானம் வளர வளர எங்கும் துறைசார்ந்த சிறப்பு மருத்துவர்கள். ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவர். மக்களும் கண்கள் சிறிது சிவந்திருந்தால்கூட நேராக கண் மருத்துவரைப் பார்க்கச் செல்கின்றனர். லேசான தலைவலி என்றால்கூட நரம்பியல் மருத்துவரை நோக்கிப் படை எடுகின்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன் என்று பர்ஸைப் பழுக்கவைத்துவிட்டு “உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இது சாதாரணப் பிரச்னைதான்” என்று மருத்துவர் சொன்னதும், “காசுக்குப் பிடிச்ச கேடு... நமக்கு நேரம் சரி இல்லை” எனப் புலம்பித் திரும்புகிறார்கள்.

பொது மருத்துவரும் சிறப்பு மருத்துவரும்

மேற்கத்திய நாடுகளில் இன்றும் பொது மருத்துவரின் சேவைதான் பிரதானமானது. அவர்கள் அந்த அமைப்பை இன்னும்கூட கறாராகப் பேணிவருகிறார்கள். அதாவது, ஒருவர் என்ன பிரச்னை என்றாலும், தன்னுடைய மருத்துவரைச் சந்தித்துதான் முதலில் ஆலோசனை பெற வேண்டும். அவர் பரிந்துரைத்தால்தான் சிறப்பு மருத்துவரைச் சந்திக்க முடியும். ‘ப்ரைமரி ஒபினியன்’ என்னவென்று தெரிந்தகொண்ட பிறகு ‘ஸ்பெஷாலிட்டி ஒபினியன்’ என்னவென்று நாடுவதுதான் நல்லது. இது குறித்த விழிப்புஉணர்வு மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்மிடம் சுத்தமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க