ஸ்டார் ஃபிட்னெஸ் - அமீர்கான்! | Star fitness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2016)

ஸ்டார் ஃபிட்னெஸ் - அமீர்கான்!

‘டங்கல்’ படத்துக்காக 6 மாத இடைவெளியில் 25 கிலோ எடை ஏற்ற வேண்டிய நிலை. “முதல்ல சிக்ஸ் பேக் போர்ஷன முடிச்சிடலாம் சார். அப்புறம் வெயிட் கூட்டுங்க” என்றார் இயக்குநர். சிறிது நேரம் யோசித்த ஹீரோ “இல்லங்க. முதல்ல எடை ஏத்திடறேன். அப்பதான் படத்துக்காக உடனே வெயிட் குறைப்பேன். இல்லைன்னா அப்படியே விட்டுடுவேன்” என்றார் அமீர் கான். இந்த டெடிகேஷன்தான் அமீர் கான். சினிமா என்றால் அமீர்கானுக்கு எதுவும் சுலபம்தான். இந்த முறை கொஞ்சம் கூடுதல் சிரமமான வேலை. எப்படி செய்தார்?

*இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்தார் அமீர். தினமும் காலை 6 மணிக்கு தொடங்கும் அமீர் கானின் நாள். மலைப் பிரதேசம் என்பதால் ட்ரெக்கிங்தான் முதல் பயிற்சி. சைக்கிள் மூலமாகவும் நடந்தும் மலையேறுவார். ரெஸ்லிங் வீரர் கதாபாத்திரம் என்பதால் கால்கள் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு ட்ரெக்கிங் சரியான வழி என்பதால் இந்த முறை ட்ரெக்கிங்குக்கு டிக் அடித்திருக்கிறார்.

*ஒருநாளைக்கு 1800 கலோரிதான். அதிலும் இனிப்புகள், கார்போ கிடையாது. புரதச்சத்தாகவும், இதர சத்தாகவும் உண்டுதான் கலோரிகளை கூட்ட வேண்டும். டைம் டேபிள் போட்டு சாப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க