தைராய்டு புற்றுநோயைத் தவிர்ப்போம்!

வெங்கடேஷ் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

சாதாரண தொண்டை வலி என்று சென்றவருக்கு, கழுத்து வீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, சில பரிசோதனைகளை செய்து வரும்படி அனுப்பினார் மருத்துவர். பரிசோதனை முடிவுகள் அவர் சந்தேகத்தை உறுதி செய்தது. ஆம், அவருக்கு வந்திருப்பது தைராய்டு புற்றுநோய். தைராய்டு சுரப்பியில் கூட புற்றுநோய் வருமா என்று வியந்தது அந்த பெண்ணின் குடும்பம். `உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் நான்கு சதவிகிதம் பேர் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள்’ என்கிறது அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று. சாதாரண கட்டியாக வந்து, புற்றுநோயாக மாறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தைராய்டு புற்றுநோய். ஏன் வருகிறது? இதற்கான சிகிச்சை என்ன?

தைராய்டு

தைராய்டு, நமது முன் கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஒன்று. இந்த சுரப்பியில் இருந்து தைராக்சின் (Thyroxine), டிரையடோதைரோனின் (Triiodothyronine) என இரண்டு முக்கியமான சுரப்புகள் உற்பத்தியாகின்றன. இதில்,  தைராக்சினை, `டி4’ (T4) என்றும் டிரையடோதைரோனினை, `டி3’ (T3) என்றும் சொல்வார்கள். இந்த இரண்டு ஹார்மோன்களையும், பிட்யூட்டரியில் இருந்து உருவாகும் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (டி.எஸ்.ஹெச்)  (Thyroid stimulating hormone) தூண்டுகிறது. நமது இதயத்துடிப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கண்காணிப்பது உட்பட எண்ணற்ற, முக்கியமானப் பணிகளை இந்த தைராய்டில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் செய்கின்றன. 

தைராய்டு பிரச்னைகளும் புற்றுநோயும்

பொதுவாக, தைராய்டு டி3, டி4 ஹார்மோன்கள் குறைவாகவோ அதிகமாகவோ சுரக்கும் பிரச்னைதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி மிகக் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை, `ஹைப்போ தைராய்டிஸம்’ என்றும் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை `ஹைப்பர் தைராய்டிஸம்’ என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிரச்னையைத் தவிர தைராய்டு சுரப்பியில் கட்டி (சிஸ்ட்) உருவாகும் பிரச்னையும் சிலருக்கு ஏற்படும். இவர்களுக்கு கட்டியை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிட்டு, தைராக்சின் மாத்திரைகள் கொடுப்பார்கள்.

தைராய்டு புற்றுநோயின் வகைகள்...

பாப்பிலரி தைராய்டு புற்றுநோய் (Papillary thyroid cancer), ஃபாலிகுலர் தைராய்டு புற்றுநோய் (Follicular thyroid cancer), மெடுல்லரி தைராய்டு புற்றுநோய் (Medullary thyroid Cancer), அனபிளாஸ்டிக் தைராய்டு புற்றுநோய் (Anaplastic thyroid cancer) என்று பொதுவாக நான்கு வகைகளாக தைராய்டு புற்றுநோயைப் பிரித்துள்ளார்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் சில நிலைகள் (Stages) உள்ளன.

பரிசோதனைகள்...

ரத்தத்தில் டி3, டி4, டி.எஸ்.ஹெச் சுரப்பின் அளவை அறிவதற்காக ரத்தப்பரிசோதனை செய்யப்படும்.

சிலருக்கு தைராய்டு புற்றுநோய் இருந்தாலும்கூட தைராய்டு சுரப்பின் அளவு இயல்பாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தைராய்டு கட்டியை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்து அதன் உடலியல் மாறுபாடு (பிசியாலஜிக்கல் வேரியேஷன்) பரிசோதிக்கப்படும். இதில் தைராய்டு கட்டியின் அளவு எவ்வளவு என்று கண்டறியப்படும். தொடர்ந்து, எஃப்.என்.ஏ (FNA - Fine Needle Aspiration) பரிசோதனை மூலம் தைராய்டு கட்டி உள்ள இடத்தில் இருக்கும் திசுவை எடுத்துப் பரிசோதிக்கப்படும். இதில், அந்தக் கட்டி சாதாரணக் கட்டியா அல்லது புற்றுநோய்க் கட்டியா என்பதைக் கண்டறியலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்