பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்! | Solution for PCOS - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பி.சி.ஓ.எஸ் - தீர்வு உங்கள் கையில்!

திருமணம் ஆகி ஓராண்டு ஆகிவிட்டது... இன்னும் கருத்தரிக்கவில்லை’’ என்று ஒரு தாய் தன் மகளை அழைத்துவந்தார். சற்று உடல்பருமனாக இருந்தார் அந்தப் பெண். முகத்தில் ரோமங்கள் வளர்ந்திருந்தன... பார்த்ததுமே அவருக்கு `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ (Polycystic ovary syndrome (PCOS)) பிரச்னையாக இருக்கலாம் எனத் தெரிந்தது. உறுதிசெய்ய, “அவருக்கு மாதவிலக்கு சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது?” என்று கேட்டபோது, “ஆறு மாதங்களுக்கு ஒரு முறை’’ என்றார். அவர் சொன்னதுமே அது பி.சி.ஓ.எஸ்தான் என்பது தெரிந்தது. மாதவிலக்கு வந்தால், அதீத ரத்தப்போக்கும் வலியும் வரும் என்றும் தெரிவித்தார்.

“உடல்பருமனாக இருக்கிறது; மாதவிலக்கும் சரியாக வரவில்லை. முன்கூட்டியே மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றிருக்கலாமே...’’ என்றபோது, “நான் ஹெல்த்தியா இருக்கிறேன் டாக்டர். நல்லா சாப்பிடுறேன். நல்லா தூங்குறேன். எல்லாம் நார்மலா இருக்கு. அதனால, பீரியட்ஸை ஒரு பிரச்னையா நினைக்கலை. சரியான பீரியட்ஸ் வரவில்லை என்பதால், உடலில் கெட்ட ரத்தம் சேர்ந்து வெயிட் போட்டுட்டேனு நினைச்சேன்” என்றார் அந்தப் பெண். 

படித்தவர்கள் மத்தியிலேயேகூட பி.சி.ஓ.எஸ் பற்றிய விழிப்புஉணர்வு மிகமிகக் குறைவாக இருக்கிறது. பலரும், அதுபற்றித் தெரியாமலேயே திருமணம் வரைகூட வந்துவிடுகின்றனர். பி.சி.ஓ.எஸ் காரணமாகக் கருத்தரிப்பது தடைபடும்போதுதான் மருத்துவர்களையே சந்திக்கின்றனர். அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யப்பட்டதில், பி.சி.ஓ.எஸ் உறுதியானது. கடைசியில், அந்தப் பெண்ணுக்கு ஹார்மோன் சிகிச்சை அளித்து, பீரியட்ஸ் வர வைத்தோம். ``இது தற்காலிகமானதுதான். நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால், அது உங்கள் கையில்தான் உள்ளது” என்று சொல்லி, அவருக்கான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைத்து அனுப்பிவைத்தேன்.  அவர் தன் வாழ்க்கைமுறையை மாற்றி, குழந்தைப்பேறை அடைய ஆறு மாதங்கள் ஆகின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick