மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு! | Modern Medicine - Arthritis and its treatments - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கு.கணேசன் பொதுநல மருத்துவர்

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் ‘மூட்டுவலி’ (Arthritis) என்று பொதுவாகச் சொல்கிறோம். இன்றைய தினம், பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடி பேர் ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது; இப்போதோ இளைஞர்களையும், டீன் ஏஜ் பெண்களையும் பாதிக்கின்ற நோயாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

பொதுவான காரணங்கள்

உடல் பருமன், முதுமை, மூட்டில் அடிபடுதல், மூட்டுச் சவ்வு கிழிதல், மூட்டுத் தேய்மானம், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick