தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?” | National Doctors Day on July 01: A time to honor physicians - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்?”

மருத்துவர் அறிவோம்!

ட்சத்திர நடிகர் நடித்த படம். திரையரங்கம் நிறைந்திருந்தது. அதில் ஒரு காட்சி. பணத்தைக் கட்டாமல் ஆபரேஷனைச் செய்ய முடியாது என மருத்துவர் சொல்கிறார். அதைக்கேட்டு ஹீரோவுக்கு ஆத்திரம் வருகிறது. மருத்துவரின் சட்டையைப் பிடித்து அடிக்கிறார்... புரட்டி எடுக்கிறார். மருத்துவர்மீது விழுகிற ஒவ்வோர் அடிக்கும் படம் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களெல்லாம் உற்சாகக் குரல் கொடுக்கிறார்கள். அவர்களே அந்த மருத்துவரைப் போட்டுப் புரட்டியெடுப்பதுபோலக் கற்பனை செய்து கொள்கிறார்கள். ``அந்த நாயைக் கொல்லுங்க’’ என்று ஒரு குரல் பின்னாலிருந்து ஒலிக்க, அதிர்ந்துபோனேன். அது ஒரு பெண்ணின் குரல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick