தூக்கத்தை வரவேற்கும் உணவுகள்!

ஷைனி சுரேந்திரன் ஊட்டச்சத்து நிபுணர்

தூக்கம்... எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாதது. மன உளைச்சலாலும் வாழ்வியல்முறை மாற்றங்களாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் இன்றைய சூழலில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது என்பது அரிதாகிவிட்டது.

ஆழ்ந்த உறக்கத்துக்கு இனி ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. சில உணவுகளுக்கு நல்ல தூக்கம் தரும் தன்மை உண்டு.

பால்

இரவு தூங்கச் செல்லும் முன் இளஞ்சூடான பாலைக் குடிக்கலாம். பாலில் உள்ள டிரிப்டோஃபன் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் மூளையிலுள்ள செரட்டோனின் (Serotonin) என்னும் நரம்பியக்கக் கடத்திகளைத் தூண்டுகிறது. அத்துடன் தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோனின் (Melatonin) எனப்படும் ஹார்மோனையும் அதிகரிக்கிறது. இதனால் இரவு முழுவதும் ஆழ்ந்து உறங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick