பெண்கள் அறியவேண்டிய ஆறு அறிகுறிகள்!

மீரா ராகவன், யூரோகைனகாலஜிஸ்ட்

பெண்கள் சந்திக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளில் ஒன்று, யூரினரி இன்ஃபெக்‌ஷன். ஆனால், அதுகுறித்த சரியான தெளிவு பெரும்பாலான பெண்களிடம் இல்லை. மாதவிடாய் போலவே இதையும் சாதாரணமாக நினைத்துவிடுகிறார்கள். அது தவறு. அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குகிறார் யூரோகைனகாலஜி மருத்துவர் மீரா ராகவன்.

யூரினரி இன்ஃபெக்‌ஷன் அதாவது, சிறுநீர்ப்பாதைத் தொற்றானது ஆண்களைவிடப் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்கள் தங்கள் சிறுநீரகத்தில் ஏதாவது  அறுவைசிகிச்சை செய்திருந்தால் மட்டுமே இந்தத் தொற்று ஏற்படும். ஆனால், பெண்களுக்கு உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின்போதும், கர்ப்பக்காலம் மற்றும் மாதவிடாய் காலத்தின் போதும் அடிக்கடி ஏற்படும். கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்தத் தொற்றை, பெண்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விடும்போது பெரிய பிரச்னையாக மாறுகிறது.

யூரினரி இன்ஃபெக் ஷனுக்கான அறிகுறிகள் என்னென்ன?

குத்துவலி மற்றும் நீர்க்கடுப்பு:
தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்குக் கீழே வலி எடுக்கும். தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவையும் அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக எரிச்சல் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick