கன்சல்ட்டிங் ரூம்

கடந்த சில வருடங்களாக, தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்துவருகிறேன். சமீபகாலமாக என்னால் அதைத் தொடர முடியவில்லை. சில நாள்கள் இடைவெளி விட்டுச் செய்கிறேன். தினசரி உடற்பயிற்சி செய்துவிட்டுத் திடீரென விட்டுவிட்டால் உடல் ஆரோக்கியம் குறையும் என்கிறார்கள் சிலர். இது உண்மையா? விட்டு விட்டு உடற்பயிற்சி செய்வதால் பலன்கள் கிடைக்குமா? இதற்கு மாற்று வழி உண்டா?

கே.சவிதா, சென்னை


முதலில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், இப்போது இடைவெளி விட்டு உடற்பயிற்சி செய்வதால் கண்டிப்பாகப் பிரச்னை ஏற்படும். உடற்பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் எல்லாம் இறுகி வலுவான நிலைக்கு வந்துவிடும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் விடுவதால் தசைகள் மீண்டும் இலகுவாக மாற நேரிடும். பிறகு, அந்தத் தசைகள் எல்லாம் இலகுவாகி உடலுக்குத் தொந்தரவுகள் கொடுக்கும். அதன்பின் உடற்பயிற்சியைத் தொடர்ந்தும் பயனில்லை. நாள்கள் விட்டு விட்டுச் செய்வதும் எவ்விதப் பலனையும் கொடுக்காது. தசைகளின் நெகிழ்திறன் (elasticity) குறைந்துவிடும். எனவே, குறைந்தது அரைமணி நேரம் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் உடலுழைப்பு இருந்தால் உடற்பயிற்சிக்கு அவசியமேயில்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, மனஉறுதியுடன் தினமும் உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick