உள்ளாடைத் தேர்வில் உறுதியாக இருங்கள்!

மகேஸ்வரி, மகப்பேறு மருத்துவர்

``உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும்கூட'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி.

உள்ளாடைத் தேர்வில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய விழிப்புஉணர்வுத் தகவல்களைப் பகிர்கிறார் அவர்.

``ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் தன் மார்பக அளவில் ஆறு முறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின் வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்பகாலத்தின்போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பிறகு, பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும். தாய்ப்பாலூட்டு வதை நிறுத்திய பிறகு, பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும். இப்படிப் பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பலர் அதற்கேற்ற வாறு தங்களின் பிரேஸியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

அளவைத் தேர்ந்தெடுக்கத் தெரியுமா?!

பொதுவாக, பெண்கள் பிரேஸியர் வாங்கும்போது 32, 34, 36 என உடல் சுற்றளவின் அடிப்படையிலேயே அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அதன் கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது A,B,C என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. உதாரணமாக, 34A என்பது உடலின் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34B என்பது சராசரி கப் சைஸும் 34C என்பது சிறிய கப் சைஸும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமன்றி, கப் சைஸையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick