மூளை - அன்லிமிடட் அமர்க்களம்! | Brain Exercises to Keep Your Mind Sharp - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/06/2017)

மூளை - அன்லிமிடட் அமர்க்களம்!

ரங்கராஜன், மனநல மருத்துவர்

மூளை... மனித உடலில் உள்ள இன்றியமையாத ஒரு பகுதி. ஏறத்தாழ 86-100 பில்லியன் நியூரான்களைக் கொண்ட மூளைக்கு மட்டுமே, உடலில் உள்ள அனைத்து நரம்பு மண்டலங்களுக்கும் கட்டளையிடும் அதிகாரம் உள்ளது. பல் தேய்ப்பது, துணி துவைப்பது, சாப்பிடுவது போன்ற சிறுசிறு விஷயங்களில் தொடங்கி முக்கிய முடிவுகள் எடுப்பது வரை அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செய்கைக்கும்
நம் மூளைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தினந்தோறும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நாம் செயல்பட மூளை சரியாக இயங்க வேண்டியது அவசியமாகும்.

மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பெருமூளைப் பகுதியானது, வலது மற்றும் இடதுபக்க மூளை என இருவகைப்படும். இந்த இரண்டு பகுதிகளும் கார்பஸ் கலோஸம் (Corpus Callosum) எனப்படும் நரம்புப் பிணையங்களின் மூலம் உடலின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும். உதாரணமாக, உடலின் வலது பாகங்கள் யாவும் இடதுபக்க மூளையின் மூலம் செயல்படும். இடது பாகங்கள் அனைத்தும் வலதுபக்க மூளையின் மூலம் இயங்கும்.

மூளைக்கு என்ன பயிற்சி?

மூளையைக் குறைவாகப் பயன்படுத்தினால் அது, தனது செயல்திறனைக் குறைத்துக்கொள்ளும். இருபக்க மூளையில், ஒருபகுதியைக் குறைவாகப் பயன் படுத்துவோமேயானால், மற்றொரு பகுதி தனது செயல்திறனைக் குறைத்துக்கொள்ளும். எனவே, இருபக்க மூளையும் சிறப்பாகச் செயல்படச் சில பயிற்சிகள் தேவை.

இடதுபக்க மூளை

இடதுபக்க மூளையானது மொழி, பேச்சு மற்றும் பிரச்னைகளுக்கான முடிவுகளை எடுப்பதோடு பகுத்துணரும் செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்ளும். இடதுபக்க மூளை அதிகம் இயங்கும்போது ஒருவரது பகுத்துணரும் திறன் அதிகரிக்கும். அனைத்துச் செயல்களிலும் கவனமாக ஈடுபடுவார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க