டாக்டர் டவுட் - தலைச்சுற்றல்

சஞ்சய் உடுப்பி காது, மூக்கு, தொண்டை நிபுணர்

காலையில் எழுந்தவுடனேயே சிலருக்குத் தலைச்சுற்றல் ஏற்படும். எழுந்து நிற்கக்கூட முடியாது. ஆனால் சில நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். ஏன் வந்தது, எப்படி விலகியது என்று அறியாமல் குழம்புவோம். ரத்த அழுத்தமாக இருக்கலாம்... சோர்வினால் வந்த மயக்கமாக இருக்கலாம் என அலட்சியப்படுத்துவோம்.

‘`காதில் ஏற்பட்ட பிரச்னையாலும் இப்படித் தலைச்சுற்றல் ஏற்படலாம். அது ‘வெர்டிகோ’ எனப்படும். பெரும்பாலும் தானாகவே சரியாகக்கூடிய இந்தப் பிரச்னை, வயதாக வயதாக யாருக்கும் வரலாம். ஆண்களைவிடப் பெண்களுக்கு வர மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் சஞ்சய் உடுப்பி.

தலைச்சுற்றலுக்கான காரணங்கள் என்ன? அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்னென்ன? தீர்வுகள் என்ன? விளக்கமாகப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick