மொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்!

மரு.ஜா.மரியானா அண்டோ புருனோ மஸ்கரணாஸ் - மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்

‘சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசியதால் விபத்து’, ‘செல்போன் வெடித்து உயிர்பலி’ போன்ற செய்திகளை அவ்வப்போது படித்திருப்போம். வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களிலும் இந்தச் செய்திகள் அதிகளவில் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். இதன் காரணமாக, சார்ஜர் போட்டுக்கொண்டே செல்போன் பேசுவது மிகவும் ஆபத்தானது என்ற விஷயம் நம் ஆழ்மனதிலேயே பதிந்துவிட்டது. உண்மையில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்தினால் விபத்து ஏற்படுமா? அப்படி ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்துவது தவறா?

சார்ஜர் இயங்கும் முறை : நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜரானது, ஏ.சி (Alternating Current) எனப்படும் மாறுதிசை மின்னழுத்தத்தை, டி.சி (Direct Current) எனப்படும் நேரடி மின்சாரமாக மாற்றி மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்யும் கன்வெர்ட்டராகத்தான் செயல்படுகிறது. AC மின்சாரத்தின் மின்னழுத்தம் அதிகமானதாக இருப்பதோடு, மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த மின்சாரம் மனித உடலை நேரடியாகத் தாக்கினால், நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், சார்ஜரானது தனது பணியைச் சரியாகச் செய்யும் பட்சத்தில், குறைந்த அளவிலான மின்னழுத்தமே மொபைலுக்கு வந்து சேரும். அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick