மாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கு.கணேசன், பொதுநல மருத்துவர்

முன்பெல்லாம் முப்பது வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் மூக்குக் கண்ணாடி தேவைப்படும். இன்றைக்கோ, மூன்று வயதுக் குழந்தைக்கே கண்ணாடி போடவேண்டிய அவலம்! கல்லூரிக்குப் போகும் வயதில் உள்ளவர்கள், கண்ணுக்குக் கான்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். அந்தளவுக்குப் பார்வைக் குறைபாடுகள் (Refractive errors) வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதித்திருக்கின்றன.
`இன்றைய தலைமுறையினரின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் மாறிவிட்ட காரணத்தால், கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன’ எனத் தெரிவிக்கின்றன பல்வேறு புள்ளிவிவரங்கள். பாதிப்புகள் அதிகமான அதே அளவுக்கு அவற்றைச் சரிசெய்வதற் கான நவீன தொழில்நுட்ப வசதிகளும் வந்துவிட்டன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்...

 பார்வை என்பது என்ன?

நாம் பார்க்கும் பொருளின் வெளிச்சம், ஒளிக்கதிர்களாகக் கண்ணுக்கு வருகிறது. அது `கார்னியா’ எனும் வட்ட வடிவச் சவ்வுப்படலம் வழியாக உள்ளுக்குள் நுழைந்து, விழி லென்ஸைக் கடந்து, விழித்திரையில் பிம்பமாக விழுகிறது. அங்குள்ள கண் நரம்பு அந்தப் பிம்பங்களை மின்தூண்டல்களாக மாற்றி, மூளைக்கு எடுத்துச்செல்கிறது. அவற்றை மூளை பரிசீலித்து, நாம் பார்க்கும் பொருளை உணர்த்துகிறது. இந்த நிகழ்வில் ஏதேனும் குறை ஏற்பட்டால், அது பார்வையைப் பாதிக்கிறது.

1. கிட்டப் பார்வை (Myopia - Short Sightedness)

கிட்டப் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு விழிலென்ஸ் அதிகமாக வளைந்திருக்கும். இதனால், விழிலென்ஸைக் கடக்கும் ஒளி, விழித்திரைக்கு முன்பாகவே வளைக்கப்பட்டு, பிம்பமாகக் குவிக்கப்பட்டுவிடும். இதனால், அவர்களுக்குத் தூரத்திலுள்ள பொருள்கள் மங்கலாகவும் அருகிலுள்ள பொருள்கள் தெளிவாகவும் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick