உடலை உறுதியாக்கும் விலங்கு பயிற்சிகள்... | Body Fitness workouts - Doctor Vikatan | டாக்டர் விகடன்

உடலை உறுதியாக்கும் விலங்கு பயிற்சிகள்...

எம்.சசிகுமார், உடற்பயிற்சியாளர்

ம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பல உடற்பயிற்சிகளைச் செய்கிறோம். குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தச் சிலநேரங்களில் கேலியாக விலங்குகளைப்போல நடந்துகாட்டுவோம். அவற்றால் உடல் ஃபிட்டாகும் என்றால் நம்புவீர்களா..? ஆம்... விளையாட்டும் உடற்பயிற்சிதான் என்பதற்கேற்ப, விலங்குகளைப்போல் நடப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சிகளைப் பயிற்சியாளர் உதவியோடு செய்வது நல்லது. முறையாகக் கற்றுக்கொண்ட பின்னர் வீட்டில் செய்யலாம். உடலை உறுதியாக்கும் விலங்குப் பயிற்சிகள் இதோ...

யார் செய்யலாம்? யார் செய்யக் கூடாது?

10 முதல் 45 வயது வரை உள்ள அனைவரும் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அதிக எடை உள்ளவர்கள் மற்றும் கட்டுக்கோப்பான உடலைப் பெற விரும்புவர்கள், இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். கர்ப்பிணிகள், கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், எலும்பு முறிவானவர்கள், பயிற்சியாளர் / மருத்துவர் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

இந்த அனைத்துப் பயிற்சிகளையும் தினமும் இரண்டு வேளை செய்யலாம். 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூன்று செட்டாகத் தொடர்ந்து செய்யலாம்.

நட்சத்திர மீன் தாவல் (Star Fish Jump)

நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று பாதி அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும். கைகளின் விரல்களை மூடி, கன்னத்துக்குக் கீழே அதாவது, தோள்பட்டைக்கு அருகில் (குத்துச்சண்டை வீரர் போல) மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கைகால்களைப் பக்கவாட்டில் விரித்து உற்சாகமாகக் குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்தும் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick