ஏன்? எதற்கு? எதில்? - பைட்டோகெமிக்கல்ஸ் எனும் உயிர்ச்சத்துகள்

அம்பிகா சேகர், டயட்டீஷியன்

பைட்டோ கெமிக்கல்ஸ்...  மனித உடலின் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படக்கூடியவை. இவற்றிலுள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், உயிர்ச்சத்துகள் எல்லாம் பலவிதங்களில் நமக்குப் பயன் தருபவை.

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், குடல் புற்றுநோய் போன்றவை வராமலும் காக்கும்.  கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கின்றது.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்

நமது செல்களைச் சிதைக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸைக் கட்டுப்படுத்த ஆன்டிஆக்ஸிடன்ட் உதவுகிறது. இதயநோய், ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய், சர்க்கரைநோய் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick