இதயத்துக்கு இதம் தரும் தாமரை விதைகள்!

சிவப்ரியா மாணிக்கவேல், உணவியல் ஆராய்ச்சியாளர்

தேசிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக் கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக் கின்றன. சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும்,  ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே பார்ப்போம்.

ஊட்டச்சத்தின் அளவு

100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick