புரதம் என்கிற அமுதம்!

ஷைனி சுரேந்திரன், ஊட்டச்சத்து நிபுணர்

`நம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, ஊட்டச்சத்துகள் அவசியம்’  எனத் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இவற்றில் மிக முக்கியமானது `புரோட்டீன்’ (Protein) எனப்படும் புரதச்சத்து. இது போதுமான அளவுக்குக் கிடைக்காதபோது நோய்கள், தொற்றுகள், உடல்சோர்வு, செயல்திறன் குறைவு... எனப் பல விளைவுகள் ஏற்படும். ஆனாலும் இது குறித்த விழிப்புஉணர்வு, அதிகம் படித்தவர்கள் மத்தியிலேயே இன்னமும் ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதை வலியுறுத்தும் வகையில் வெளியாகியிருக்கிறது, இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஓர் ஆய்வு முடிவு. அதாவது, `இந்தியாவில், சைவ உணவு உண்பவர்களில் 90 சதவிகிதம் பேரும் அசைவ உணவு உண்பவர்களில் 85  சதவிகிதம் பேரும் புரதச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்’ என்கிறது.

`இந்தியாவில் அதிகரித்திருக்கும் புரதச்சத்துக் குறைபாட்டுக்கு வறுமை மட்டுமல்ல; சரியான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் எவை என்பது குறித்த மக்களின் அறியாமையும் காரணம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன, அறிகுறிகளைக்கொண்டு அதை எப்படி அடையாளம் காண்பது, அதற்கான தீர்வுகள்  யாவை என்பனவற்றையெல்லாம் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick