மண், சாக்பீஸ், சிலேட்டுக் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல்...

உணவுத்தேடலும் உடல் உணர்த்தும் உண்மைகளும்ஹேமமாலினி, ஊட்டச்சத்து நிபுணர்

ன் பக்கத்து வீட்டுக் குட்டிப்பெண் நித்தி... 6 வயது. அத்தனை ரைம்ஸையும் சர்வசாதாரணமாகச் சொல்லக்கூடியவள். அதிகமாகச் சேட்டை செய்யக் கூடியவள் அல்ல. ஆனாலும், தன் அம்மாவிடம் தினமும் அடி வாங்குவாள். என்ன காரணம் என்று ஒருநாள் அவளின் அம்மாவிடம் கேட்டேன்... ``எப்போ பார்த்தாலும் சாக்பீஸைத் திங்குறா. அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே ஓடிப் போய் மண்ணை அள்ளித் திங்குறா. எவ்வளவு சொன்னாலும் கேட்குறதில்லை. அதான் அப்பப்போ அடி விழுது’’என்று புலம்பித் தள்ளினார் நித்தியின் அம்மா.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இதுபோன்ற விசித்திரமான பழக்கங்கள் இருக்கலாம். மண், சாக்பீஸ், சிலேட்டில் எழுதப் பயன்படுத்தப்படும் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல், வெறும் உப்பு, ஊறுகாய், சர்க்கரை, ஸ்வீட்ஸ், ஐஸ் கட்டிகள்... இப்படி ரகம் ரகமாக அடிக்கடி சாப்பிடும் நபர்கள் அநேகம். இதுபோன்ற பழக்கத்துக்கு என்ன காரணம்,  இது உடல் சார்ந்த பிரச்னையா அல்லது மனம் சார்ந்த பிரச்னையா, இதைத் தடுக்கும் வழிகள்  என்ன? விளக்கமாகப் பார்ப்போம்.

பொதுவாக இதுபோன்ற பிரச்னைகளுக்கு இரண்டு  காரணங்களிருக்கும்.  ஒன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றொன்று மனம் தொடர்பான காரணங்களால் உண்டாவது.

நம் உடலிலேயே இன்பில்ட் மெக்கானிசம் இருக்கிறது. அதற்குத் தேவையான பொருள்களை அதுவே எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, நம் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டால்,  தாகத்தின் மூலம் நம் உடலுக்குத் தண்ணீர் தேவை என்பதை உடல் உணர்த்துவதுபோல நம் உடல் உணர்த்தும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும். அதில் நம் உடலுக்கான தேவையும் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick