இன்சுலின் செடி - சர்க்கரை நோயாளிகளின் வரமா?

‘அது பணக்காரர்களுக்கு வரக்கூடிய நோயாச்சே...’ என்று சர்க்கரை நோயைச் சொல்வார்கள். அது அந்தக் காலம். இன்றைக்கு ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் வதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோயாக உருவெடுத்து நிற்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்து, மாத்திரைகள் தரப்படுகின்றன. அதேவேளையில் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி என்ற ஒன்று சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. அது சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லி நர்சரிகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செடியைச் சிலர் வீடுகளிலும் வளர்த்து வருகிறார்கள்.

காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் ‘ஃப்ளோரிடா’ மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொச்சியிலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும். 

இன்சுலின் செடியைப் பற்றி அறிந்து கொள்வதற்குமுன் இன்சுலின் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ‘ஆயுர்வேதத்தில் இன்சுலினா?’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். மனிதர்களின் கண், நரம்பு, தோல், எலும்பு, கிட்னி என ஒவ்வொரு உறுப்பாகப் பாதித்து அணு அணுவாகச் சித்ரவதை செய்யக்கூடியது சர்க்கரை நோய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick