டாக்டர் டவுட் - ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்புகள்

ஜூலை 28 - உலக ஹெபடைட்டிஸ் தினம்

ஹெபடைட்டிஸ்... இது கல்லீரலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ். இதில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தேவையான தடுப்பு முறைகள் போன்றவற்றை இங்கே பார்ப்போம்.

ஹெபடைட்டிஸ் வைரஸின் வகைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, இ, ஜி எனப் பல வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், தண்ணீர் மற்றும் உணவு ஒவ்வாமையால் ஏற்படும். அசுத்த நீரில் கைகால்களைக் கழுவுவது, வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்தவகை வைரஸ்களால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் மஞ்சள் காமாலைக்கும் பின்னாள்களில் கல்லீரல் பாதிப்புக்கும் வழி வகுக்கும்.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துபவை. பி வைரஸ் ரத்தத்தின் மூலம் பரவக்கூடியது. இதனால் ஏற்படும் மஞ்சள்காமாலையை குணப்படுத்தவே முடியாது. சில நேரங்களில், ஹெபடைட்டிஸ் டி வரவும் வழிவகுக்கும்.

நுரையீரலில் வீக்கம் ஏற்படுவதுதான் ஹெபடைட்டிஸ் சி வைரஸின் தொடக்கம். சிகிச்சைகள் மேற்கொள்ளாதபட்சத்தில் இவை பெரும்பாலும்  நுரையீரல் செயலிழப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

ஹெபடைட்டிஸ் டி வைரஸ், நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தாது. மாறாக, பி வகை வைரஸோடு சேர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை. நோய் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே சிகிச்சை தொடங்குவதன் மூலம், நுரையீரல் பாதிப்புக்குள்ளாகாமல் காப்பாற்ற முடியும்.

ஹெபடைட்டிஸ் இ வைரஸால் மஞ்சள்காமாலை பிரச்னை மட்டுமே வரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இவ்வகை வைரஸினால் மஞ்சள்காமாலை ஏற்பட்டால், தாய் - சேய்  இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick