இயற்கையை வணங்குவோம்!

குமரேசன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர்

யல்வெளி, திண்ணைவீடுகள், ஓலைக் குடிசைகள், கோயில்கள், குளங்கள், மரங்கள், பறவைகள்... இவையெல்லாம் கிராமத்தின் அடையாளங்கள். ஒருமுறை இத்தகைய கிராமங்களுக்குச் சென்றுவந்தவர்களை மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் வகையில் அவற்றின் இயற்கைச் சூழல்கள் அருமையாக அமைந்திருக்கும். கிராமங்களின் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் பொருள்களின் பயன்பாடு என அனைத்துமே தனித்துவமானவை. செயற்கைக்கலப்புகள், ரசாயனச் சேர்க்கை போன்றவற்றின் தாக்கம்   கிராமங்களில் குறைவு.  கிராமங்களைப்போல் நகரங்களிலும் முடிந்த அளவு இயற்கை சார்ந்த வாழ்க்கையை நாம் வாழ முயல வேண்டும். சில முயற்சிகளாலும் மெனக்கெடல்களாலும் கெமிக்கல் வாழ்வின் நாசங்களிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். நகரங்களிலும் ஓர் அழகிய கிராமியச் சூழலை உருவாக்குவோம்; ஆரோக்கியம் காப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick