எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0 | Bone health tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் கால் மூட்டுத் தேய்மானம் குறித்து விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மூட்டில் ஏற்படக்கூடிய ஜவ்வு கிழிதல் மற்றும் தசைநார் காயம் (Ligament Injuries) பற்றித் தெரிந்துகொள்வோம்.
நமது கால் மூட்டானது தொடை எலும்பின்  கீழ்ப்பகுதி, தொடை எலும்பு, கால் எலும்பின் மேல் பகுதி, கால் முன் எலும்பு  மற்றும் வட்டவடிவில் இருக்கும் எலும்பு போன்ற மூன்று பகுதிகளால் உண்டானது என்று நாம் முன்னரே பார்த்தோம்.

இது ஒரு கீல் கூட்டு வகையைச் சேர்ந்தது. கதவானது திறந்து மூடுவதற்கு, கதவில் பொருத்தியுள்ள கீல் பயன்படுத்தப்படுவதைப் போன்று நாம், நம் கால்களை நீட்டவும் மடக்கவும் இது பயன்படுகிறது. இரண்டு எலும்புகளுக்கிடை யேயான உராய்வைத் தடுக்கத் தலையணை (Cushion) போன்ற அமைப்பு உள்ளது. இது   குழிமட்டம் (Meniscus) என்று அழைக்கப்படுகிறது. மேலும் கால் முட்டியில் சிலுவைப் போன்ற அமைப்பில் திசு உள்ளது. இதனை க்ரூசியேட் லிகமென்ட்ஸ் (Cruciate ligaments)  என்று அழைக்கிறோம்.  
  
வேகமாக ஓடும்போதோ திடீரென்று திரும்பும்போதோ மூட்டின் திசுக்கள் கிழிய வாய்ப்பு உள்ளது.  இப்படி முட்டியில் அடிபடுவதால், அதிகமான வலி இருக்கும். வலி மட்டுமல்லாது முட்டியின் உள்ளே ரத்தக்கசிவு ஏற்படுவதால், வீக்கமும் ஏற்படும். அவர்களால் நடக்கமுடியாது. இது போன்ற சமயத்தில், முதலுதவியாக ஐஸ் பேக்ஸ் (Ice packs) பயன்படுத்தலாம். உடனடியாக எலும்பு மூட்டு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

முதல் கட்ட சிகிச்சைக்காக முட்டியில் எங்கு அடிபட்டுள்ளது என்பதைக் கண்டறிய எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (X ray - MRI Scan) பரிந்துரைக்கப்படலாம். எக்ஸ்ரே மூலம் எலும்புகளில் ஏற்பட்ட முறிவுகளை மட்டுமே அறிய முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம்தான் திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புகளை அறியலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick