வாலு மிரண்டால்? - ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்!

அசோகன், மனநல மருத்துவர்

‘வர வர உன் சேட்டை கூடிக்கிட்டே போகுது. ஹாஸ்டல்ல சேர்த்துடறேன் பாரு’ எனப் புலம்பும் அம்மாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘பக்கத்து வீட்டுப் பசங்களோடு சண்டை இழுத்துட்டு வர்றான். வெளியிடங்களுக்கு நிம்மதியா போக முடியலை. கேள்வி கேட்டே கொன்னுடுறான். இவனை எப்படியாவது அமைதியா இருக்க வைங்க டாக்டர்’ என மருத்துவரிடம் படையெடுக்கிறது பெற்றோர் பட்டாளம். ‘சுட்டித்தனம்’ என ரசிக்கப்பட்ட குழந்தைகளின் மழலைப் பேச்சு, ‘பிஞ்சிலே பழுத்தது’ என மாறிவிட்டது. உண்மையில், அதிகச் சுட்டித்தனம் என்பது நோயா? இதற்குத் தீர்வு என்ன?

‘‘இவர்கள் எல்லாம் ‘ஹைப்பர் ஆக்டிவ்’ குழந்தைகள். ஐன்ஸ்டீன் உள்பட பல சாதனையாளர் களும் ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளாக இருந்தவர்கள்தான். மற்ற பிள்ளைகளிடம் இல்லாத ஒரு தனித்தன்மை, இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும். அதற்காக எல்லா குழந்தைகளையும் ஹைப்பர் ஆக்டிவ் என்று சொல்ல முடியாது’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

 ‘‘நாம் சிறு வயதில் செய்த குறும்புத்தனங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றை எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று கடந்து போனார்கள் நம் பெற்றோர். இன்று நினைத்தாலும் சிரிப்பைத் தரக்கூடிய நினைவுகளாக இருக்கின்றன. நம் பிள்ளைகளின் குறும்புகளும் அப்படியே. குறும்புக்கும் ஹைப்பர் ஆக்டிவிட்டிக்கும் ஒரு மெல்லிய இடைவெளியே இருக்கிறது. உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிற விஷயங்கள் குறும்புகள். ஓர்  இடத்தில் நில்லாமல், அதே சமயம் குறும்புகளை மிச்சம் வைக்காமல் தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருந்தால் அவர்கள் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி என்றால் என்ன? மற்ற குழந்தைகளிடமிருந்து இவர்கள் எப்படி மாறுபடுகிறார்கள்?

 ‘அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிசார்டர்’ என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்னை, பொதுவாக ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்தான் அதிகம் காணப்படும். அட்டென்ஷன், ஹைப்பர் ஆக்டிவிட்டி, இம்பல்சிவிட்டி என மூன்று அறிகுறிகளில் ஏதாவது ஒன்றோ, அல்லது மூன்றுமோ சில குழந்தைகளிடம் காணப்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick