சப்பணமிட்டுச் சாப்பிடுவோம்!

ப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுப்பா!’ - உணவு வேளைகளில் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் அறிவுரை. அதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று  நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும், உடல் உபாதைகள் வருகின்றன.  காரணம், தரையில் அமராமல் கண்டபடி அமர்ந்து சாப்பிடும் முறையினால். தரையில் அமர்வதே ஒரு வகை யோகாதான். செங்குத் தாக முதுகுத் தண்டு நிமிர்ந்து நிற்க, கால்களும் தொடைகளும் எவ்வளவு விரிவான இடத்தை அடைக்க முடியுமோ அப்படி அடைத்துக் கொள்ளும்படி அமர்ந்திருப்போம். சப்பணமிட்டுச் சாப்பிடுவதில்  பலன்கள் எக்கச்சக்கம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick