ஈட்டிங் டிஸ்ஆர்டர் - தடுக்க... தவிர்க்க!

ராஜ்குமார், குடல் இரைப்பை நிபுணர்

`சத்தான ஆகாரம், வளமான வாழ்வைத் தரும்’ என்று உணவின் முக்கியத்துவத்தை நம் முன்னோர் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால், தற்போது உணவை எடுத்துக்கொள்ளும் முறையிலேயே நமது கவனமும் அக்கறையும் அதிகம் தேவைப்படுகின்றன. ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று மருத்துவர்கள் கூறுவதை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். இது உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பல பிரச்னைகளைத் தரக்கூடியது.

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்றால் என்ன?

உடல் எடை அல்லது உடல் வடிவம் பற்றிக் கவலை கொண்டவர்களுக்கு ஏற்படுவதுதான் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் என்கிற இந்தக் குறைபாடு (ஈட்டிங் டிஸ்ஆர்டர்). போதிய அளவு உணவை எடுத்துக்கொள்ளாமலும் அதிகப்படியான உணவை உட்கொள்ளும்போதும் நமது உடல்நிலை பாதிப்படைகிறது. தற்போது பெரும்பாலான மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகப்படியாக இந்தக் குறைபாடு காணப்படுகிறது.

ஈட்டிங் டிஸ்ஆர்டர் வகை

அனொரெக்சியா நெர்வோசா
(Anorexia Nervosa)


இந்த வகையைச் சார்ந்தவர்கள் குறைந்த எடையை உடையவர்களாக இருந்தாலும், எங்கே எடை கூடிவிடுவோமோ என்னும் பயத்தில் குறைந்த அளவு உணவையே சாப்பிடுவார்கள். இதனால் மூளைப் பாதிப்பு, எலும்புத் தேய்மானம், இதயக் கோளாறுகள் போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு.

புலிமியா நெர்வோசா (Bulimia nervosa)

இந்த வகையைச் சார்ந்தவர்கள் கட்டுப்பாடின்றி அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வார்கள். தங்களின் உடல் எடை அதிகமாகிவிடும் என்ற பயத்தில் சாப்பிட்டவுடன் வலுக்கட்டாயமாக வாந்தி எடுப்பது, அதிகமாக உடற்பயிற்சி செய்வது என இருப்பார்கள். இதனால் இரைப்பைப் பிரச்னைகள், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick