கன்சல்ட்டிங் ரூம்

குமார், மதுரை.

நான் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. அப்படி அமர்வதால் தொடர்ந்து கால் ஆட்டும் பழக்கம் வந்துவிட்டது. இந்தப் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இப்படி கால் ஆட்டும் பழக்கம் நல்லதா, கெட்டதா? இதை எப்படித் தவிர்க்கலாம்?

தமிழ்முத்து, பொது மருத்துவர், தர்மபுரி

அமர்ந்திருக்கும்போது கால்களை ஆட்டுவதென்பது ஒருவிதமான பழக்கம்தான். ஒரு வேலையைச் செய்யும்போது கவனம் வேறு திசையில் சிதறினால் இப்படிக் கால்களை ஆட்டும் பழக்கம் வந்துவிடும். மனஅழுத்தம், நிலைத்தன்மை (Stability) சரியாக இல்லாமல் போவது போன்றவை இதற்கான காரணங்கள். ஓர் அளவோடு இருக்கும்வரை இதனைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், அதிக நேரம் கால் ஆட்டினாலோ ஒரு கட்டத்தை மீறும்போதோ பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

இந்தப் பழக்கத்தை நிறுத்த, காலை 5.30 - 6.30 மணிக்குள்  நடைப்பயிற்சி செய்யலாம். இந்த நேரத்தில் ஆக்ஸிஜன் சீராகக் கிடைக்கும். கால் ஆட்டக்கூடாது என்று பேப்பரில் எழுதி, நீங்கள் உட்காரும் இடத்தில் ஒட்டி வையுங்கள். அதுபோல அருகில் உள்ள நண்பரிடமும் நீங்கள் கால் ஆட்டினால் கவனித்துச் சொல்லும்படி சொல்லுங்கள். நீங்களே முயற்சி செய்தால் நிச்சயம் இதை நிறுத்த முடியும். முடியாத தருணத்தில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று, இதிலிருந்து திசைத் திருப்பும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick