அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் - அவசியமா? ஆபத்தா?

பாலமுருகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

புற்றுநோய், நாம் உண்ணும் உணவாலும் வரலாம், சூரியஒளி அதிகம் படுவதாலும் வரலாம் என்கிறபோது கதிரியக்கங்களாலும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆம், புற்றுநோயும் கதிரியக்கமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கிய இடம் கதிரியக்கத்துக்கு உண்டு. ஆனால் நமக்கு ஏற்படும் சில உடல் கோளாறுகளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற கதிரியக்கப் பரிசோதனைகளின்போது கதிர்களை நம் உடலில் செலுத்தியே முடிவுகள் பெறப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் கதிர்களே புற்றுநோயை ஏற்படுத்தும் என்னும்போது நமது உடலை ஊடுருவிச் செல்லும் இந்தக் கதிர்களும் ஆபத்தானவையா? ஒரு மருத்துவப் பரிசோதனையே மற்றொரு நோய்க்கு வழிவகுக்கிறதா? எக்ஸ்-ரே  எடுக்கலாமா, கூடாதா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அவற்றுக்கு விடைகள் அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick