மகிழ்வித்து மகிழுங்கள்...நண்பர்களைக் காப்பாற்றுங்கள்...

`உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பார்கள். நட்பு என்பது ஒருவரின் ஆளுமையை எந்த அளவுக்கு மாற்றியமைக்கக்கூடியது, மனதில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது என்பதையே குறிப்பிட்டுச் சொல்கிறது இந்த அனுபவமொழி. இந்த வரிகளுக்கு வலுசேர்ப்பதுபோல் அமைகின்றன சமீபத்திய ஆய்வுகள். நம்முடைய நண்பர்களின் மனநிலையும் பழக்கவழக்கங்களும் நமக்கும் தொற்றிக்கொள்ளும் என்கின்றன அந்த ஆய்வுகள். பொதுவாகக் கிருமிகள்தான் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்பது நமது எண்ணமாக உள்ளது. இந்தப் பழக்கங்களும்கூட ஒருவகையில் தொற்றுநோய்தான் என்கின்றன ஆய்வு முடிவுகள். அதேசமயம் மற்ற தொற்றுநோய்களைப்போல் இது விபரீதமானது இல்லை என்றாலும், கொஞ்சம் கவனமாக இருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியான பழக்கங்கள் எவை, அவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick