நீரின்றி இயங்காது உடல்! | Importance of Water in Human Body - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நீரின்றி இயங்காது உடல்!

சுந்தர்ராமன், பொது மருத்துவர்

`நீரே! உல‌கில் முக்கால் பாக‌ம் நீதான்! ஆயினும் நீ கிடைக்க‌வில்லை என்றுதான் உல‌க‌மே மூக்கால் அழுகிற‌து..!’ உண்மையைச் சொல்லும் கவிதை வரிகள் இவை. யதார்த்தம் இப்படியிருக்க, மனித உடலின் தண்ணீர்த் தேவையைப் போக்கித் தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு நிகராக வேறு எந்தப் பானமும் கிடையாது. நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. இந்த அறிவுரை அனைவருக்கும் 100 சதவிகிதம் பொருந்தாது.  ஒவ்வொரு வரின் உடல் அமைப்பும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.  அதற்கேற்ப அவர்களின் தண்ணீர்த் தேவை வேறுபடும். ஆனால், நம் உடல் தனக்குத் தேவையான நீர்த்தேவையைச் சில அடையாளங்கள் மூலம் நமக்கு அழகாக வெளிப்படுத்தும். அப்படியான சில சமிக்ஞைகளைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick