காரணம் இல்லாத கோபத்துக்கும் காரணம் உண்டு!

கல்பனா சம்பத், மகப்பேறு மருத்துவர்

மாதவிலக்கு, பெண்களுக்கு அவ்வளவு இனிய விஷயம் கிடையாது. அதற்கு முன்னும் பின்னும் சந்திக்கும் தொந்தரவுகள் அதிகம். மாதவிடாய் தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்பிலிருந்தே அவதிகள் துவங்கிவிடும். மாதவிலக்கு நாள்களில் படும் அவஸ்தைகள் இன்னும் மோசம். வலியும் வேதனையும்  சேர்ந்து ஒவ்வொரு பீரியட்ஸும் எப்போது முடியும் என்றே பெண்களுக்குத் தோன்றும்.

மாதவிடாய்க்கு முன்பு உடல் மற்றும் உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் ‘ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப் படுகின்றன. மாதவிலக்கு நாள்களுக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே இதற்கான அறிகுறிகள் தொடங்கி விடுகின்றன. பெண்களின் வழக்கமான சுழற்சிக்காலம் 28 நாள்கள். ஒரு சிலருக்கு இது மாறுபடும். மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பான அறிகுறிகளைக் கண்டு பெரிதும் பயப்படத் தேவையில்லை. மாதவிடாய் முடிந்ததும் அவை நீங்கிவிடும்.

மாதவிடாய் காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மூளையில் உண்டாகும் ரசாயனச் சுரப்பின் தன்மைக்கு ஏற்ப பெண்ணின் உடல் இது போன்ற மாற்றங்களைச் சந்திக்கிறது.

* பெண்ணின் உடல்பருமன், பயிற்சியின்மை மற்றும் எடுத்துக்கொள்ளும் உணவு ஆகியவற்றுக்கும் பி.எம்.எஸ்.ஸுக்கும் தொடர்பு உள்ளது.

பி.எம்.எஸ். அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக் கும் வேறுபடுகின்றன. பொதுவாக, 14ம் நாளில் தொடங்கி மாதவிடாயிலிருந்து  ஏழு நாள்கள் வரை இந்த அறிகுறிகள் நீடிக்கலாம்.

மாதவிலக்கு நாளுக்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே தலைவலி, மூட்டு வலி என மெல்ல உடலைப் படுத்தி எடுக்கும். மார்புகள் கனமாகவோ, லேசாகவோ தோன்றும். உடலில் ஒருவித சோர்வும், முகப்பருக்களும் வரலாம்.

பசியின்மை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு என்று செரிமானம் தொடர்பான தொல்லைகள் உருவாகலாம்.

காரணம் இல்லாத கோபம் அல்லது அழுகை வரலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படலாம்.

தூக்கம் வராமல் சோர்வுடன் காணப்படலாம்.

தனிமையில் இருக்கத் தோன்றும்.  கவனக்குறைவு, ஆர்வமின்மை ஆகியவற்றால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும்.

இது போன்ற அறிகுறிகளைப் பார்த்து பெண்கள் பயப்படத் தேவையில்லை. வாழ்க்கை முறையில் சிலவற்றை மாற்றிக் கொள்வதன் வழியாகத் தீர்வு காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick