டாக்டர் டவுட் - கோடைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?

தேவராஜன், பொது மருத்துவர்

கோடை என்றதும் விடுமுறைதான் நினைவுக்கு வரும். குறிப்பாகக் குழந்தைகள் `ஊர் சுற்றலாம் வாங்க...'ன்னு தம் நட்புகளுடன் கைகோத்து விளையாடத் தயாரானாலும், வெயிலின் தீவிரம் அவர்களை அனுமதிப்பதில்லை. ஆம்... வறுத்தெடுக்கும் வெயிலின் காரணமாகக் காய்ச்சல், சளி, இருமல் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இங்கே பார்ப்போம்..!

கோடையில் காய்ச்சல் அதிகமாக வருகிறதே... ஏன்?

நமது உடல், 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. ஆகவே அந்த எண் சாண் உடம்புக்காக ஒருநாளைக்கு 8 முதல் 10 டம்ளர் வரை நீர் அருந்த வேண்டியது அவசியம். ஆனாலும், கோடைக் காலத்தைப் பொறுத்தவரை, உடலின் நீர்ச்சத்து வேகமாகக் குறையும். இப்படி உடல் வறட்சி ஏற்படும்போது, உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் பரவக்கூடிய எல்லா நோய்க் கிருமிகளும், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக, நண்பகல் நேரங்களில் வெயிலில் அலைபவர்கள், அதிக அளவு உழைப்பவர்கள், அதிக ஆக்டிவாக இருப்பவர்கள் (கூலிவேலை செய்பவர்கள் தொடங்கி கார்ப்பரேட் தொழிலாளிகள் வரை) ஆகியோருக்கு, இந்த வகை உடல் சோர்வுகளும், நோய் எதிர்ப்புத் திறன் குறைதலும் ஏற்படும். இன்றைய எந்திர உலகில் அனைவருமே மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கோடைக் காய்ச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இவை யாவும், காய்ச்சலைத் தாண்டி சளி, இருமல், தொண்டைவலி, உடல்வலி, அதீத தாகம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

நண்பகலில் (பகல் 12-4 மணி வரை) வெளியே செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

வெயிலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் சூட்டுக் கட்டி உருவாகும். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது, உடல் சோர்வு ஏற்படும். வெப்பம் அதிகரிப்பதால், வெப்பப் பக்கவாதம்கூட (Heat Stroke) ஏற்படும்.

கோடைக்காலக் காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன?

கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் நோய்க் கிருமிகள் அதிகளவில் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, வியர்வை அதிகமாக வெளியேறி, உடல்சோர்வு உண்டாகும். அது நோய்க்கிருமிகள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கும். இந்தப் பிரச்னையில், காய்ச்சல் அதிகளவில் பரவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick