ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி | Fibromyalgia: Causes, Trigger Points, Treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி

ஜி.கே.குமார், வலி நிவாரண மருத்துவர்

“பிளாட்பாரத்துக்குப் போய் டிக்கெட் எடுத்துட்டேன் டாக்டர். நான் வழக்கமாகப் போகும் டிரெயின்தான். ஆனால், எந்தத் திசையில் போகணும், நான் எங்கே இருக்கேன் என எல்லாமே கொஞ்ச நேரத்துக்கு மறந்துபோச்சு. உடம்பு வலி ஒருபுறம் வாட்ட, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுட்டேன்.” - ஓர் இளம் பெண், மருத்துவரிடம் பகிர்ந்த வார்த்தைகளே இவை.

கைகால் வலி, தலைவலி, மூட்டுவலி என நாம் அனைவருமே தினசரி வாழ்க்கையில் ஏதாவதொரு வலியைக் கடந்துதான் வந்திருப் போம். பொதுவாக, ஒரு வலி நிவாரணி மாத்திரையுடன் அந்த நாளை மறந்துவிடுவோம். ஆனால், இந்த வலியே நோயாக மாறினால்? அதுதான் ‘ஃபைப்ரோமையால்ஜியா’ (Fibromyalgia). அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick