மனதில் உறுதி வேண்டும்!

கே. மதன் மோகன், நுரையீரல் சிறப்பு நிபுணர்

ப்போதுதான் ஒரு சிகரெட்டைப் புகைத்திருப்பார். கீழே போட்டு மிதித்த கையோடு இன்னொன்றை எடுத்துப் பற்றவைப்பார். இப்படி ஒருவரை அல்ல... பலரை நாம் பார்த்திருப்போம். இதைத்தான், `செயின் ஸ்மோக்கிங்’ (Chain Smoking) என்கிறோம். அப்படிப் புகை பிடிப்பவர், `செயின் ஸ்மோக்கர்’ (Chain Smoker). புகைப்பழக்கத்தில் இருந்து ஒருவரை விடுவிப்பது கடினம்... செயின் ஸ்மோக்கர்ஸை விடுவிப்பது மிக மிகக் கடினம். ஆனால், இப்படித் தொடர்ந்து புகை பிடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத் தெரிந்துகொண்டாலே இவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவார்கள்.

கவனம்... நாள் ஒன்றுக்கு 10 சிகரெட்டுக்கு மேல் பிடிப்பவர்கள், தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick